Overblog
Edit page Follow this blog Administration + Create my blog
/ / /
பன்றி இறைச்சி உண்ண இஸ்லாத்தில் தடை ஏன்?
  பன்றி இறைச்சி ஹராம் என அல்குர்ஆனில் கட்டளையாக குறிப்பிடப்பட்டிருப்பதனால் 
      (தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்;, அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்;. இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்;. எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான் (05:03)                                                                                                    
        முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, இஸ்லாமிய மார்க்கமானது மனிதனை புனிதனாக்க இறைவன் வழங்கிய இயற்கை நெறியாகும். எனவே அதில் ஆகுமாக்கப்பட்டவைகளும் (ஹலால்), தடுக்கப்பட்டவைகளும் (ஹராம்) மனிதனது நலனுக்காகவே வழங்கப்பட்டவையாகும். அவற்றிற்கான காரணங்கள் (Logic & Reasons) சிலவேளை வெளிப்படலாம் அல்லது நமக்கு வெளிப்படுத்தப்படாமலே கூட இருக்கலாம். எவ்வாறாயினும் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய யாவருக்கும் (அவர் எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்) இக்கட்டளைகள் நன்மையே பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
    குறிப்பாக பன்றியின் இறைச்சி உண்ணத் தகுந்ததல்ல என்பதற்கு இன்று அனேக ஆதாரங்கள் அறிவியலாளர்களால் எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றுள் பிரதானமானது, பன்றியின் இறைச்சியில் உள்ள நாடாப் புழுக்கள். இந்நாடாப் புழுக்கள் அதிஉச்ச கொதிநிலையில் கூட மரணிப்பதில்லை. இவை பன்றியின் இறைச்சியோடு இரண்டறக் கலந்து உட்கொள்ளப்படுவதால் எளிதில் மனிதனின் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. பின்னர் மனிதனின் தலைமைச் செயலகமான மூலையை நோக்கி முன்னேறிச் செல்கின்றன, அல்லது உடலின் பிற முக்கிய உறுப்புக்களில் (Internal Organs)உள் நுழைந்து விடுகின்றன. பின்னர் அவற்றை செயலிழக்கச் செய்கின்றன.
    பிற நோய்களைக் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்க்கொள்ளப்படுவது போல், இந்நோய் குறித்து பரவலாக பிரச்சாரம் நடத்தப்படவில்லை. எனவே இதன் அபாயம் அனேகருக்கு விளங்க வில்லை.இதுவே பன்றி இறைச்சியை  உணவாக உட்கொள்ளாமல் இருப்பதற்கு போதிய காரணமாகும்.
      எனினும் wikipidia -ல் பன்றி இறைச்சி பற்றி குறிப்பிடும் போது, அவ்விறைச்சியினால் கொழுப்புச்சத்து கிடைக்க பெறினும் ஏற்படும் உடல் தீங்கு குறித்து இவ்வாறு கூறுகிறது.
           "2007 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின் படி, பதனம் செய்த பன்றி இறைச்சியைஉட்கொள்வது மற்றும் நாள்பட்ட தடைசெய்யும் நுரையீரலைத் தாக்கும் நோய்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. பாதுகாப்புப் பொருளான சோடியநைத்திரைற்று அதற்கு காரணமாகும்,மேலும் நைத்திரைற்று சேர்க்காத பேக்கன் பொருட்கள் தற்பொழுது கிடைக்கின்றன. அதிக அளவில் பேக்கன் போன்ற சிகப்பு மாமிசம் உண்பதால்பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சூழ் இடர் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பேக்கன் பொதுவாக உப்பு மற்றும் தெவிட்டிய கொழுப்பு அதிக அளவில் கொண்டதாகும், இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் பல தரப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படும்.
 
    மேலதிகமான விபரங்களைப் பெற டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் Islamic Dietary Laws  எனும் வீடியோவைப் பார்வையிடவும். .

 
Share this blog
Repost0